நள்ளிரவில் காவல் ஆணையர் அலுவலகம் மீது சரமாரி கல்வீச்சு: சென்னை போலீஸார் அதிர்ச்சி

கல்வீசப்பட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்
கல்வீசப்பட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்காவல் ஆணையர் அலுவலகம்

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மீது சரமாரியாக கல்வீசிய மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை வேப்பேரியில் காவல் ஆணையரக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 8 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் இயங்கி வருகிறது. நான்கு நுழைவாயில் கொண்ட இந்த அலுவலகத்தில் முதல் நுழைவாயில் காவல் ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று வருகின்றனர்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் தோற்றம்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் தோற்றம்.

இந்நிலையில் நேற்று இரவு அலுவலக நுழைவாயிலை பூட்டி விட்டு உட்புறம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 11 மணியளவில் காவல் ஆணையர் செல்லும் நுழைவாயிலுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென இரும்பு கேட்டின் மீது கற்களை கொண்டு வீசி தாக்கியுள்ளார். இதில் இரும்பு கேட் கம்பி உடைந்தது சேதமடைந்தது. உடனே சத்தம் கேட்டு ஓடிவந்த பாதுகாப்பு காவலர்கள் கேட்டைத் திறந்து பார்ப்பதற்குள் கற்களை வீசிய மர்மநபர் தப்பிச் சென்றார்.

பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் தகவல் அளித்ததன் பேரில் வேப்பேரி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் ஆணையர் அலுவலகம் மீது கற்களை வீசிய நபரை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆணையர் அலுவலகம் மீது கற்களை வீசிய சம்பவம் போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in