நீதிமன்ற தீர்ப்பு: கலெக்டர்கள், அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு!

நீதிமன்ற தீர்ப்பு: கலெக்டர்கள், அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு!

நீதிமன்ற உத்தரவுகளைக் குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி, தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளைக் குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தவிர்க்கலாம் எனவும் வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளைக் குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அந்த கடித நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதைத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு ஏற்றுக் கொண்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in