`ஸ்டாலின் தமிழ்நாட்டின் ராஜாவா இருக்கிறார்'- முதல்வரிடம் உணவு வாங்கிச் சாப்பிட்ட குழந்தை நெகிழ்ச்சி

`ஸ்டாலின் தமிழ்நாட்டின் ராஜாவா இருக்கிறார்'- முதல்வரிடம் உணவு வாங்கிச் சாப்பிட்ட குழந்தை நெகிழ்ச்சி

`ஸ்டாலின் தமிழ்நாட்டின் ராஜாவா இருக்கார்' என்று முதல்வரிடம் உணவு வாங்கிச் சாப்பிட்ட குழந்தை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அரசுப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு உணவுப் பரிமாறிய முதல்வர், அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அப்போது, 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி ரித்திகாவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டார் முதல்வர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த மாணவியிடம் செய்தியாளர் ஒருவர், உங்களுக்கு சாப்பாடு ஊட்டியவர் யார் என்று கேட்டார். அப்போது அந்த குழந்தை, ஸ்டாலின் ஐயா என்று பதில் அளித்தது. இதன் பின்னர் அந்த குழந்தையிடம், ஸ்டாலின் தமிழ்நாட்டில் என்னவாக இருக்கிறார் என்று கேட்டபோது, அவர் ராஜாவாக இருக்கிறார் என்று தனது மழலை மொழியில் அசத்தலாக பதிலளித்தது.

அவர் உன்னிடம் என்ன பேசினார் என்று கேட்டபோது, எங்க அப்பா, அம்மாவை கேட்டாங்க. எங்க அப்பா இல்லைன்னு சொன்னேன். உங்க அப்பா என்ன வேலை பார்த்தாங்கன்னு கேட்டாங்க. எங்க அப்பா அயன் வேலை பார்த்தாங்கன்னு சொன்னேன். நீ எத்தனாவது வகுப்பு படிக்கிறாய் என்று கேட்டாங்க. இரண்டாம் வகுப்பு படிக்கிறேன் என்று சொன்னேன். உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டாங்க. என்னுடைய பெயர் நிகிதா என்று சொன்னேன். உனக்கு ஊட்டிவிட்ட சாப்பாடு எப்படி இருக்குன்னு கேட்டாங்க. நல்லா இருக்குன்னு சொன்னேன்.

முதல்வர் உனக்கு சாப்பாடு ஊட்டிவிட்டது எப்படி இருந்தது என்று கேட்டதற்கு, சந்தோஷமாக இருந்தது என்று குழந்தை ரித்திகா பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in