`நான் வாழும் வரை ஆதரவாக இருப்பேன்'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு ஸ்ரீதர் வேம்பு உருக்கமான விளக்கம்

மனைவி, மகனுடன் ஸ்ரீதர் வேம்பு
மனைவி, மகனுடன் ஸ்ரீதர் வேம்பு `நான் வாழும் வரை ஆதரவாக இருப்பேன்' மனைவியின் குற்றச்சாட்டுக்கு ஸ்ரீதர் வேம்பு உருக்கமான விளக்கம்

"நான் எப்போதும் பிரமிளாவையும் என் மகனையும் ஆதரித்து வருகிறேன். நான் வாழும் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன்" என்று சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு உருக்கமாக விளக்கம் அளித்துள்ளார்.

உலகின் முன்னணி சோஹோ நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் அடுக்கடுக்கான புகார்களை கூறியிருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அதில், "நானும் எனது கணவர் ஸ்ரீதர் வேம்பும் 29 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். 2020-ம் ஆண்டு தமிழ்நாடு திரும்பிய பிறகு அவர் என்னையும் மகனையும் கைவிட்டுவிட்டார். என் மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு, உடல் ரீதியாக சில பாதிப்புகளும் உள்ளன. அவர், எங்களை கவனிக்கவில்லை" என்று பிரமிளா கூறியிருந்தார்.

மனைவியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, "எனது பிஸினஸ் வாழ்க்கையை விட தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்தது. எனது மகனுக்கு ஏற்பட்ட ஆட்டிசம் பாதிப்பு எங்கள் வாழ்க்கையை சிதைத்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனச் சோர்வடையை செய்தது. நானும் எனது மனைவியும் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிசத்துக்கு எதிராக போராடி வருகிறோம். பிரமிளா ஒரு நல்ல அம்மா. எங்கள் மகனுக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த வேண்டும் என்பதே அவரின் முக்கிய நோக்கம்.

சோஹோ நிறுவனத்தில் என்னுடைய உரிமை குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். நிறுவனத்தில் உள்ள எனது பங்குகளை நான் வேறு யாருக்கும் மாற்றியதில்லை. நான் பிரமிளாவையும் எனது மகனையும் பொருளாதார ரீதியாக கைவிட்டுவிட்டேன் என்று சொல்வதில் உண்மையில்லை. அவர்கள் என்னை விட நல்ல வசதியாக வாழ்கிறார்கள். நான் எப்போதும் பிரமிளாவையும் என் மகனையும் ஆதரித்து வருகிறேன். நான் வாழும் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in