திருச்சுழியில் ரமண மகரிஷி 143-வது ஜெயந்தி விழா!

திருச்சுழியில் ரமண மகரிஷி 143-வது ஜெயந்தி விழா!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ரமண மகரிஷி பிறந்த வீட்டில் 143-வது ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில்  ஸ்ரீமான் சுந்தரம் அய்யருக்கும், அழகம்மையாருக்கும் 2-வது மகனாக 1879-ம் ஆண்டு  ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்தார். திருச்சுழியில் உள்ள ஸ்ரீ சுந்தர மந்திரம் இல்லத்தில் ஸ்ரீமகான் ரமண மகரிஷி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த வீட்டில் 143-வது பிறந்தநாள் விழா மற்றும் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ரமண மகரிஷி பிறந்த புனர்பூசம் நட்சத்திர தினமான இன்று அவரது இல்லத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, ரமண மகரிஷிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர்  மகா தீப ஆராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு ரமண மகரிஷி எழுந்தருளி அருள் பாலித்தார்.

ரமண மகரிஷி ஜெயந்தி விழாவையொட்டி உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ரமண மகரிஷியை தரிசித்தனர்.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in