இலங்கையின் நெருக்கடிக்கு பல ஆண்டுகளாக நடைபெறும் நிதிமுறைகேடு தான் காரணம்: மத்திய வங்கி ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

இலங்கையின் நெருக்கடிக்கு பல ஆண்டுகளாக நடைபெறும் நிதிமுறைகேடு தான் காரணம்: மத்திய வங்கி ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிதிமுறைகேடு தான் காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்," சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 3 பில்லியன் டாலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது. இந்த கடன் 3 வருட காலப்பகுதியில் தவணை முறையில் இந்த நிதி பெறப்படும் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பணத்தை வழங்க ஆரம்பித்த பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி மேலும் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ளது" என்று கூறினார்.

மேலும் "விரிவாக்கப்பட்ட நிதி வசதி என்பது, கடுமையான பணப் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வசதியாகும். கடந்த காலங்களில் இலங்கை அதிகாரிகள் செய்த தவறுகளுக்குப் பாடம் கற்பதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி ஒரு சந்தர்ப்பம். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் முடிவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை மாற்றியமைக்கக் கூடாது. அதிகாரிகள் பாடம் கற்று, சரியான திசையில் செல்வதற்கும், சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு அப்பால் செல்வதற்கும் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிதி முறைகேடுதான்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in