இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டருக்கு வந்த அடுத்த சோதனை!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டருக்கு வந்த அடுத்த சோதனை!

ஆஸ்திரேலியாவில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா. இவர் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தார். இதனிடையே, பயிற்சி ஆட்டத்தின் போது குணதிலகாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அணியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், டேட்டிங் ஆப் மூலம் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட அவர், கடந்த 2-ம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அவரை சந்தித்த குணதிலகா, பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சிட்னி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குணதிலகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, ஜாமீன் கேட்டு குணதிலகா தாக்கல் செய்த மனுவை ஆஸ்திரேலியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனிடையே, குணதிலகா விவகாரத்தில் ஐ.சி.சி.யுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு ஒரு முழுமையான விசாரணை விரைவாக தொடங்கும் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியது.

இந்த நிலையில், தனுஷ்கா குணதிலகா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாகவும். வேறு எந்த அணி தேர்வுக்கும் அவர் பரிசீலனை செய்யப்படமாட்டார் என்றும் இதனை எந்த வகையிலும் சகித்து கொள்ள முடியாது எனவும் விரைவில் விசாரணை நடத்தி முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in