இலங்கையின் இன்னல் தொடர்கிறது… எரிபொருள் தட்டுப்பாடால் இரவில் மோதல்: 6 போலீஸார் காயம்

இலங்கையின் இன்னல் தொடர்கிறது… எரிபொருள் தட்டுப்பாடால் இரவில் மோதல்: 6 போலீஸார் காயம்

கொழும்புவில் எரிபொருள் தட்டுப்பாடல் ஏற்பட்ட மோதலில் 6 போலீஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் நீடிக்கிறது. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொதுமக்களிடையே மோதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே எரிபொருள் கிடைக்காததால் நேற்று இரவு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 6 போலீஸார் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in