73 ரன்களில் இலங்கை ஆல் அவுட் - மிரட்டிய இந்திய பவுலர்கள்: 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

73 ரன்களில் இலங்கை ஆல் அவுட் - மிரட்டிய இந்திய பவுலர்கள்: 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்துள்ளது. 391 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 73 ரன்களில் சுருண்டது.

இந்தியா - இலங்கை அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்கம் முதலே அபாரமாக ஆடினார்கள். மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் கில் மற்றும் விராட் கோலி அதிரடியாக ஆடினார்கள்.

இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்தினை நாலாபக்கமும் சிதறடித்த கில், 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் தொடர்ந்து தெறிக்கவிட்ட விராட் கோலி 110 பந்துகளில் 13 பவுண்டரிகள் 8 சிக்சருடன் 166 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணி 391 ரன்கள் என்ற மிகச்சவாலான இலக்குடன் ஆடத் தொடங்கியது. ஆனால் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலமாக இந்திய அணி இந்த தொடரை 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in