ஜல்லிக்கட்டு, எருதுவிடுதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு: தமிழக காவல் துறை எச்சரிக்கை

தமிழ்நாடு காவல் துறை
தமிழ்நாடு காவல் துறைசமூக வலைதளங்களில் அவதூறு: தமிழக காவல் துறை எச்சரிக்கை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கம்பாலா, எருது விடுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்த தடை ஏதும் விதிக்கவில்லை என தமிழக காவல்துறை விளக்கமளித்துள்ளது. அத்துடன் இதுதொடர்பாக சமூக வலைதங்களில் அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அனுமதியின்றி எருது விடுதல் போட்டி நடத்தப்பட்டது, மேலும் எருதுவிடும் போட்டிக்குக் காவல் துறை தடைவிதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் போலீஸாருக்கும், போட்டியாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதன் காரணமாக நேற்று காலை ஓசூர் பெங்களூரு சாலையில் ஓன்று திரண்ட ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸார் அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் ஈடுபட்டவர்கள் அவ்வழியாக வந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதால் காவல்துறையினர் கண்ணீர் குண்டுகளை வீசி தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விளக்கம்.
தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விளக்கம்.

இந்நிலையில் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, கம்பாலா, எருது விடுதல் போன்ற விளையாட்டுகளுக்குத் தடை விதித்திருப்பதாக சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அது போன்ற எந்த தடையையும் தமிழக காவல்துறை விதிக்கவில்லை என தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோன்று அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in