அமைச்சர் கீதாஜீவன், குடும்பத்தினர் மீது அவதூறு: சமூகவலைதளங்களில் பரப்பியவர் சிக்கினார்

அமைச்சர் கீதாஜீவன், குடும்பத்தினர் மீது அவதூறு: சமூகவலைதளங்களில் பரப்பியவர் சிக்கினார்

தமிழக அமைச்சர் கீதா ஜீவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பியவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி புதிய துறைமுகம் லேபர் காலனியைச் சேர்ந்தவர் நடராஜ் ( 38). இவர், அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திமுக தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தூத்துக்குடி சண்முகபுரம் பிரபு, போலீஸில் புகார் அளித்தார். இதனடிப்படையில், தெர்மல் நகர் போலீஸார் வழக்குப்பதிந்து நடராஜை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in