சிறாருக்கான தடுப்பூசியை விரைவுபடுத்துங்கள்!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அலர்ட்
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசிhindu கோப்பு படம்

“15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்” என்று, மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை கடிதம் மூலம் அலர்ட் செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது கரோனா 3-வது அலை தீவிரமடைந்து வருகிறது. உயிரிழப்புகள் ஆயிரத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. முதியோர்கள், வாலிபர்கள், 18 வயதை கடந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. அந்த நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்ததால் மாணவ - மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்றது. இதனிடையே, கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் தடுப்பூச செலுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். அதில், “15 வயது முதல் 18 வயதினருக்கான கோவாக்சின் தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளியில் 2-வது டோஸ் போட்டுக்கொள்ளலாம். அதன்படி, ஜனவரி 31 முதல் 2-வது டோஸ் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in