சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்: இன்றுமுதல் முன்பதிவு

சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்: இன்றுமுதல் முன்பதிவு

சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை, தாம்பரத்தில் இருந்து வரும் 25-ம் தேதி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது, தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் வரும் 29-ம் தேதியில் மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலானது மறுநாள் 30-ம் தேதி, அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று அடையும்.

இதேபோல் தாம்பரத்தில் இருந்து 26-ம் தேதி இரவு 9 மணிக்கு நெல்லைக்குப் புறப்படும் ரயிலானது, மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்று அடையும். இதேபோல் நெல்லையில் இருந்து 27-ம் தேதி மதியம் ஒரு மணிக்குப் புறப்படும் ரயிலானது, மறுநாள் காலை 3.20 மணிக்குத் தாம்பரம் சென்று அடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்றுமுதல் (ஞாயிறு) தொடங்குகிறது ”என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in