
சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்தியோக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மூன்று குளிர்சாதன பெட்டிகள் 8 ஸ்லீப்பர் கோச்சிகள் ஒரு பான்ட்ரி கார் இரண்டு பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டலம் சார்பில், ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற பெயரில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
இதில் பயணிகள் ஆடி அமாவாசை அன்று கயாவில் தங்கள் முன்னோர்களுக்கு பிண்ட தானம் செய்யும் வகையில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து தொடங்கி மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி திரிவேணி சங்கமம், அலகாபாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா பயணத்தின் கட்டணம் 21 ஆயிரத்து 800 முதல் 39 ஆயிரத்து நூறு ரூபாய் வரை ஒரு நபருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 750 பேர் இதில் பயணம் செய்யக்கூடிய வசதி உள்ளது. மேலும் ஒவ்வொரு ஊரிலும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதியும், பயணிகளின் தேர்வுக்கு ஏற்ப உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிற்காம் அறிவித்துள்ளது.