ஹோலி கொண்டாடத்திற்கு புறப்பட்டாச்சு: வடமாநில தொழிலாளர்களுக்காக கோவையில் இருந்து சிறப்பு ரயில்

வடமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்.
வடமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்.ஹோலி கொண்டாடத்திற்கு புறப்பட்டாச்சு: வடமாநில தொழிலாளர்களுக்காக கோவையில் இருந்து சிறப்பு ரயில்

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் உள்பட கோவை சுற்றுவட்டாரப் பகுதியில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு விரைந்து வருகின்றனர். இதற்கென சிறப்பு ரயில் இன்று இரவு இயக்கப்படுகிறது.

வட இந்தியர்களில் ஹோலி பண்டிகையை மிகவும் உற்சாகக் கொண்டாடுவது வழக்கம். உலகின் எங்கு இருந்தாலும், ஹோலி பண்டிகை காலங்களில் தங்களின் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைப் பலரும் வழக்கமாகவே வைத்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் பின்னலாடை நிறுவனங்கள் தொடங்கி பல பணிகளும் செய்கின்றனர்.

ஹோலி பண்டிகைக்கு இவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு வசதியாக கோயம்புதூரில் இருந்து, பிஹார் தலைநகர் பாட்னாவிற்கு இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயிலை இயக்குகிறது ரயில்வே துறை. கோயம்புத்தூரில் இருந்து கிளம்பும் இந்த ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலன், காட்பாடி, பெரம்பலூர், ஜோலார்பேட்டை, விஜயவாடா வழியாக 7-ம் தேதி இரவு 8 மணிக்கு பாட்னா சென்று அடையும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in