சுதந்திர தினத்தில் 5 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

சிறந்த பொது சேவைக்கான தமிழக முதலமைச்சரின் சிறப்புப் பதக்கம் 5 காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தில் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்றும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதல்வர் பதக்கங்களை வழங்குவார். அதன்படி இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் பதக்கங்களை பெறுபவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி...

1) பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ், கூடுதல் ஆணையர், சட்டம் ஒழுங்கு(தெற்கு), சென்னை.

2) கே.அம்பேத்கர்,சிஐடி சிறப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர், கடலூர்.

3) எஸ்.சிவராமன், சிறப்பு உதவி ஆய்வாளர், ஜே-2 அடையாறு போக்குவரத்து காவல் நிலையம், சென்னை.

4) வி.பழனியாண்டி, சிறப்பு உதவி ஆய்வாளர், இ -2 மச்சியம் போக்குவரத்து காவல் நிலையம், மதுரை.

5) எம்.குமார், சிறப்பு உதவி ஆய்வாளர், ஜே-10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலையம், தாம்பரம்.

இவர்களுக்கான பதக்கங்கள் சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in