கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு!

கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறைத் தொடர்பாக சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை டிஜிபி சைலேந்திர பாபு அமைத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலமாக மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தனியார் பள்ளியில் வன்முறை நடைபெற்றதற்கான காரணம் என்ன, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்குக் குழு அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. மேலும் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் வன்முறை நிகழ்ந்த தனியார் பள்ளியை மீண்டும் இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `வன்முறைக்கு காரணமான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியவர்கள், பொய்யான செய்திகளைப் பரப்பியவர்கள், வன்முறை நிகழ்த்தியவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில், 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு செயல்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in