கையில் 'பொருள்', வாயில் சிகரெட்டுடன் இன்ஸ்டாவில் இளம்பெண் அலப்பறை: கைது செய்ய தனிப்படை தீவிரம்

வினோதினி என்ற தமன்னா
வினோதினி என்ற தமன்னா கையில் 'பொருள்', வாயில் சிகரெட்டுடன் இன்ஸ்டாவில் இளம்பெண் அலப்பறை: கைது செய்ய தனிப்படை தீவிரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை கைது செய்ய கோவை மாநகர போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

'பிரகா சகோதரர்கள்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இளைஞர்கள் குழு பொம்மைத் துப்பாக்கிகள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை கோவையைச் சேர்ந்த பிரபல ரவடிகள் தீவிரமாக பின்பற்றி வந்தனர். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகள் வினோதினி என்ற தமன்னா (23) என்ற இளம் பெண்ணும் 'பிரகா சகோதரர்கள்' இன்ஸ்டாகிராம் பக்கத்தின் தீவிர உறுப்பினராக உள்ளார். இவர் frnds_cal_me_thamanna என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்துள்ளார். இதில் வினோதினி பயங்கர ஆயுதங்களுடன், சிகரெட்டி புகைப்பிடிப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவர் பல ஆண்டுகளாக கோவையில் உள்ள பீளமேடு, காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகிறார்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இளம்பெண் வினோதினி என்ற தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது போன்று இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பெண் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் நட்பாக பழகி தனது நண்பர்களின் உதவியுடன் பணம் பறித்துள்ளார். வீடியோக்கள் மூலம் இரண்டு ரவடி குழுக்களுக்கு இடையே பகையை வளர்க்கவும் முயற்சி செய்துள்ளார். விரைவில் வினோதினியை கைது செய்து சிறையில் அடைப்போம்" என்றார்.

கடந்த 2021-ம் ஆண்டு பீளமேடு போலீஸார், வினோதினி என்ற தமன்னா மற்றும் சூர்யா என்கிற சூர்யபிரசாத் ஆகியோரை இரண்டு கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்துள்ளனர். வினோதினி நர்சிங் டிப்ளமோ முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in