விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவிகளின் கவனத்துக்கு: டிசம்பர் 21, 22-ல் கல்விக்கடன் சிறப்பு முகாம்!

விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவிகளின் கவனத்துக்கு: டிசம்பர் 21, 22-ல் கல்விக்கடன் சிறப்பு முகாம்!

விருதுநகர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் வரும் 21, 22 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தின் முன்னோடி வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் சார்பில், சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி, பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, அருப்புக்கோட்டை ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லூரி, ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி, திருவில்லிபுத்தூர் ஸ்ரீபாலகிருஷ்ணா கல்லூரி, வத்திராயிருப்பு கலசலிங்கம் பல்கலைக்கழகம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள முகாமில் சாத்தூர் வட்டார கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள முகாமில் திருச்சுழி, நரிக்குடி வட்டார கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். கல்விக்கடன் பெறவிரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்ப நகல்களுடன் கல்விக்கடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்'' என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in