அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிச.15-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. இத்தேர்வு டிச. 23-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6, 8, 10, 12- ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7,9, 11-ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

இந்த சூழலில் அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அத்துடன் டிச. 24-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் மட்டும் தரலாம் என்று பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜன. 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in