மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இன்று முதல் இணைக்கலாம்: தொடங்கியது சிறப்பு முகாம்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இன்று முதல் இணைக்கலாம்: தொடங்கியது சிறப்பு முகாம்!

பொதுமக்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வசதியாக  அந்தந்த மின்கட்டண அலுவலகங்களில் இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

பொதுமக்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பல இடங்களில் ஆதார் எண் இணைக்காததால் மின்கட்டணத்தை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஆதார்  இணைக்கப்படாவிட்டாலும் மின்கட்டணத்தை கட்டும் வசதி செய்து தரப்பட்டது.

இந்த நிலையில் அனைவரும் கட்டாயமாக தங்கள்  ஆதாரை இணைக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தியுள்ள தமிழக மின்சாரத்துறை அப்படி ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்களையும் ஏற்பாடு செய்துள்ளது. அந்தந்த பகுதி மின் கட்டண அலுவலகங்களில்  இன்று தொடங்கி, டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. 

பொதுமக்கள் தங்களது மின் அட்டை மற்றும் ஆதார் அட்டையை கொண்டு சென்று, இலவசமாக இணைத்து கொள்ளலாம். அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in