ஆயுத பூஜைக்கு 3700 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

அரசு விரைவு பேருந்து
அரசு விரைவு பேருந்து

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகத்தில் வரும் 30 மற்றும் 1-ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், “ஆயுதபூஜையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 30, மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதேபோல் கோயம்பேடு உள்ளிட்ட மூன்று பேருந்து நிலையங்களில் இருந்தும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட வெளியூர்களுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு நாள் தோறும் 2100 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதனோடு 2050 சிறப்புப் பேருந்துகளும் ஆயுத பூஜையை முன்னிட்டு இயக்கப்பட உள்ளன. இதேபோல் சென்னை தவிர்த்து, தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்குள் 1650 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன ”என்றார்.

இதேபோல் தீபாவளி பண்டிகைக்கான அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவும் இன்று முதல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு விரைவுப் பேருந்துகளில் ஒருமாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளியை ஓட்டிய பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறு,விறுப்பாக நடந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in