சென்னை- பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: சபரிமலைக்கு செல்ல தமிழக அரசு ஏற்பாடு

சென்னை- பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: சபரிமலைக்கு செல்ல தமிழக அரசு ஏற்பாடு

சபரிமலைக்கு வரும் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்க உள்ளது.

பண்டிகை காலங்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அண்மையில் தீபாவளிக்கு 15,000 மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி சென்று வந்தனர். அதேபோல் தற்போது சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை- பம்பை- குமுளி இடையே வரும் 17-ம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன் கட்டண விவரத்தையும் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பெரியவர் ஒரு நபருக்கு 1,090 ரூபாயும், சிறியவர்களுக்கு 545 ரூபாய் என கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஜனவரி 18-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in