மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.'சோப் வாங்கிய உங்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறது': நெல்லை மக்களிடம் நூதனமுறையில் மோசடி

'சோப் வாங்கிய உங்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறது': நெல்லை மக்களிடம் நூதனமுறையில் மோசடி

உங்களுக்குப் பரிசு விழுந்திருக்கிறது என்று சோப்பு கம்பெனி மேலாளர் பேசுவதாகச் சொல்லி நெல்லை மக்களிடம் நூதன முறையில் பணமோசடி செய்த மூன்றுபேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், தென்கலம் பகுதியில் சில வாலிபர்கள் சோப் விற்க வந்தனர். அப்போது அவர்கள் இந்த சோப்பை வாங்கினால் பரிசு விழும். அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்து சோப் விற்றனர். மேலும் சோப் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் அவர்களது பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றையும் வாங்கிச் சென்றனர். சிலநாள்கள் கழித்து எண் வாங்கியவர்களுக்கு அழைத்து சோப் கம்பெனியின் மேலாளர் பேசுவதாகவும் உங்களுக்கு தங்கக்காசு, டிவி, பைக் பரிசு விழுந்துள்ளது. அதற்கு வரியாக 36,600 ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதை நம்பி பலரும் பணமும் அனுப்பியுள்ளனர்.

ஆனால் பரிப்பொருள்கள் வழங்கவில்லை. இதுகுறித்து நெல்லைமாவட்ட சைபர் கிரைம் போலீஸாருக்கு மக்கள் புகார்கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த காளீஸ்வரன், இசக்கிமுத்து, அய்யனார் ஆகியோர்தான் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களைக் கைதுசெய்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மூவரும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரிடம் செல்போன் சிம்கார்டு வாங்கி, இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தங்கராஜ் தன் கடைக்கு சிம்கார்டு வாங்க அடையாள அட்டை கொடுக்கும் வாடிக்கையாளர்களின் விபரங்களைப் போலியாக பயன்படுத்தி, அந்தப் பெயரில் இருக்கும் சிம்கார்டுகளை இந்த மோசடி சம்பவத்திற்கு பயன்படுத்தக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸார் தங்கராஜையும் கைதுசெய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in