எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் .ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக சட்டப்பேரவைத் தலைவரை நானும் சந்தித்தேன். இரங்கல் தீர்மானத்தின் மீது பேசுவது குறித்து பேசினேன். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் தான் உரிய முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், “வரும் 16ம் தேதி வெளிமாநில தொழிலாளர்கள் வாக்களிப்பது தொடர்பாக புதிய திட்டம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நடத்த இருக்கிற கூட்டத்தில், எங்கள் சார்பாக யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையிலான மோதலுக்குப் பின்னர், ஈபிஎஸ் தரப்பில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமித்தனர். ஆனால் அந்த முடிவின் மீது இன்னும் சபாநாயகர் முடிவெடுக்காமல் உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in