குமரியில் அமைகிறது விண்வெளி பூங்கா: இஸ்ரோவுக்கு தமிழக அரசு 12 ஏக்கர் இடம் ஒதுக்கீடு

இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்

கன்னியாகுமரி அருகே 12 ஏக்கர் பரப்பளவில் விண்வெளிப்பூங்கா அமைய உள்ளது. இஸ்ரோ நிறுவனத்திற்கு இதற்காக 12 ஏக்கர் பரப்பளவை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விண்வெளி ஆராய்ச்சி பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கும். கன்னியாகுமரியில் இந்த மையம் அமைவதன் மூலம் சுற்றுலாப்பயணிகளும், அவர்களுடன் வரும் குழந்தைகளும் அறிவியல் ஆர்வத்தில் உந்தப்படுவார்கள் என்பதால் தான் இந்த மையத்திற்கு கன்னியாகுமரியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த மையத்திற்கு கன்னியாகுமரியில் சூரியன் அஸ்தமனப் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக அரசு இந்த விண்வெளி பூங்கா அமைய 12 ஏக்கர் நிலத்தை இஸ்ரோவுக்கு வழங்கி உள்ளது. இங்கு விண்வெளி பூங்கா அமைப்பிற்கான திட்ட வரைவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் மனிதர்கள் வடிவிலேயே பொம்மையை அனுப்புவோம். தொடர்ந்து மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in