பழநி கோயில் கும்பாபிஷேகம்: மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

பழநி கோயில் கும்பாபிஷேகம்:  மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

புகழ் பெற்ற பழநி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து பழநிக்கு  முன் பதிவில்லாத  சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நாளை ஜனவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் பின்னர்  பிப்ரவரி 5-ம் தேதி தைப்பூச விழா நடைபெற உள்ளது. இதற்கு தமிழக முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழநியை நோக்கி படையெடுப்பார்கள்.  இதனைக் கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக மதுரை - பழநி இடையே  முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி மதுரை - பழநி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06080) ஜனவரி 26, 27 மற்றும் பிப்ரவரி 3, 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்குப் பழநிக்குச் செல்லும். அதேபோல் மறு மார்க்கத்தில் இதே நாட்களில் பழநி - மதுரை முன்பதிவில்லா விரைவு ரயில் (06079), பழநியிலிருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in