மயிலாடுதுறை - திண்டுக்கல் விரைவு ரயில் இனி செங்கோட்டைக்கும் செல்லும்!

மயிலாடுதுறை - திண்டுக்கல் விரைவு ரயில் இனி செங்கோட்டைக்கும் செல்லும்!

மயிலாடுதுறையிலிருந்து திண்டுக்கல் வரை இயக்கப்படும் மயிலாடுதுறை - திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் ரயில் இனி செங்கோட்டை வரை இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

வண்டி எண் : 16848 / 16847 மயிலாடுதுறை - திண்டுக்கல்  எக்ஸ்பிரஸ் ரயில்  எதிர்வரும் 01.10.22 முதல் இரு மார்க்கங்களிலும் மதுரை, திருமங்கலம், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப் பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

திண்டுக்கல்லில்   இருந்து மாலை 04.05 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 05.15 வந்து சேரும்.  05.25 மணிக்கு மதுரையில் புறப்பட்டு செங்கோட்டைக்கு இரவு 09.15 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கமாக செங்கோட்டையில் காலை 07.10 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 10.25 மணிக்கு வந்து சேரும். அங்கிருந்து  10.30 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு  11.20 மணிக்கு வந்து சேரும்.  திண்டுக்கல்லில் இருந்து  11.25 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு மாலை 04.00 சென்றடையும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து காலை 11.25 புறப்பட்டு திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு மாலை 4.00 மணிக்கு இந்த ரயில்  சென்றடையும். இங்கிருந்து 4.05 க்கு   புறப்பட்டு செங்கோட்டைக்கு  இரவு 9.15க்கு சென்றடையும். இதன் மூலம் மயிலாடுதுறையில் இருந்து செல்பவர்கள் நேரடியாக மதுரைக்கும்,  செங்கோட்டைக்கும் அதே ரயிலில் செல்ல முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in