தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழைதான் பெய்யும்!

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழைதான் பெய்யும்!

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மாலை 5.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சாகர் தீவுகளுக்கு தெற்கு 350 கிலோமீட்டர் தொலைவிலும் பரிசாலுக்கு (வங்கதேசம்) தெற்கு தென்மேற்கு 520 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்படக்கூடும். அதன் பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கக்கூடும்.

இன்று தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் நீலகிரி கோயம்புத்தூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 28-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in