அதிரடியாக விளையாடி வெற்றி பெற முயன்ற டி காக்: தொடர் மழையால் தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே ஆட்டம் ரத்து!

அதிரடியாக விளையாடி வெற்றி பெற முயன்ற டி காக்: தொடர் மழையால் தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே ஆட்டம் ரத்து!

தொடர் மழை காரணமாக தென் ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா அணியும், ஜிம்பாவே அணியும் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்தது ஜிம்பாவே அணி. ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் போட்டி 9 ஓவராக குறைக்கப்பட்டது. இதையடுத்து ஜம்பாப்வே அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதே நேரத்தில் வெஸ்லி அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். 9 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 80 ரன்கள் எடுத்தால் வெற்றி எந்த இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக டி காக்கும், டெம்பா பவுமா களமிறங்கினர். ஆனால், தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த்லூயிஸ் விதிப்படி 7 ஓவர்களில் 64 ரன்கள் தென்ஆப்பிரிக்கா அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் டி காக் ஜோடி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. டி காக் 18 பந்தில் 47 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரி ஒரு சிக்சர்கள் அடங்கும். 3 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in