உலக கோப்பை இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இருக்கணும்: ஆதரவு கரம் நீட்டும் சவுரவ் கங்குலி

கங்குலி, ஜெஸ்வால்
கங்குலி, ஜெஸ்வால்

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே 171 ரன்கள் அடித்து அசத்தலாக விளையாடினார். அந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அவரது ஆட்டத்தை பல முன்னணி வீரர்கள் புகழ்ந்துள்ளனர்.

இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி உலக கோப்பை விளையாட உள்ள இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு இடமளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வாலுக்கு திறமையும், தனித்துவமும் இருப்பதாக கூறியுள்ள கங்குலி, அவரால் நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளர்.

அதுமட்டுமல்லாது, அவரது பேட்டிங் திறனை ஐபிஎல் தொடரில் இருந்து பார்த்து வந்தாலும், டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார் என்றும் ஜெய்ஸ்வாலால் இந்திய அணிக்காக தனது பங்களிப்பை நீண்ட காலம் வழங்க முடியும் என தான் நம்புவதாகவும் கங்குலி கூறியுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் கலந்துகொள்ளும் இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரை அந்த தொடரில் இருந்து நீக்கி உலக கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in