
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜனவரி 4ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மார்பக மருத்துவத் துறையின் மருத்துவர்கள் அருப் பாசு மற்றும் அவரது குழுவினர், சோனியா காந்தியின் வைரஸ் சுவாச நோய்த்தொற்றைக் கண்காணித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்பாக சர் கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுத் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் வெளியிட்ட அறிக்கையில், “வைரஸ் சுவாசத் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுபிஏ தலைவர் சோனியா காந்தியின் உடல் நிலை சீராகி, படிப்படியாக முன்னேறி வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.