குடியரசுத் தலைவரைச் சந்தித்த சோனியா!

குடியரசுத் தலைவரைச் சந்தித்த சோனியா!

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது பல்வேறு முரண்கள் ஏற்பட்டிருக்கின்றன. சமீபத்தில், ஜி23 தலைவர்களில் பிரதானமானவரான குலாம் நபி ஆசாத், காஷ்மீரின் பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். ஜி23 குழுவைச் சேர்ந்த இன்னொரு தலைவரான ஆனந்த் சர்மாவும், இமாசல பிரதேசத்தின் வழிகாட்டும் குழுவின் தலைமைப் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். தொடர்ந்து புறக்கணிப்புகளையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்வதால் வேறு வழியின்றி பதவிவிலகுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, அனைத்து இந்திய காங்கிரஸ் பேரவையின் (ஏஐசிசி) இமாசல பிரதேசத்தின் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, ஆனந்த் சர்மாவைச் சந்தித்துப் பேசியிருந்தார். பின்னர் டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்தித்தார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சோனியா சந்தித்திருக்கிறார். திரெளபதி முர்மு பதவியேற்ற பின்னர் சோனியா காந்தி அவரை நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரெளபதி முர்முவை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in