இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி வாழ்த்துக் கடிதம்!

சோனியா காந்தி சந்திரயான் 3
சோனியா காந்தி சந்திரயான் 3

சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் இறங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘இஸ்ரோவின் மகத்தான வெற்றி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த சாதனையானது அனைத்து இந்தியர்களையும், குறிப்பாக இளைய தலைமுறையினரை உற்சாகமடைய செய்யும் ஒரு பெருமைக்குரிய விஷயம். சுயசார்பை மட்டுமே நம்பி 60-களின் தொடக்கத்திலிருந்தே இஸ்ரோ பல வெற்றிகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த உற்சாகமான தருணத்தில் இஸ்ரோவை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

சந்திரயான் 3
சந்திரயான் 3

இதனிடையே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, இஸ்ரோ தலைவர் சோம்நாத்தையும் மற்ற விஞ்ஞானிகளையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in