காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மகளும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் அவருடன் மருத்துவமனைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், செவ்வாய்கிழமை முதல் அவரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, அவர் “விரைவாக குணமடைந்து ஆரோக்கியமாக திரும்ப வேண்டும்” என்றும் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in