தந்தை வாங்கிய கடனுக்கு செல்லமாக வளர்த்த ஆடு பறிமுதல்: மனமுடைந்த மாணவர் எடுத்த விபரீத முடிவு!

தந்தை வாங்கிய கடனுக்கு செல்லமாக வளர்த்த ஆடு பறிமுதல்: மனமுடைந்த மாணவர் எடுத்த விபரீத முடிவு!

தந்தை வாங்கிய கடனுக்காக, வீட்டில் செல்லமாக வளர்த்த ஆட்டை பறிமுதல் செய்துவிட்டுச் சென்றதால் பாலிடெக்னிக் மாணவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

சேலம் மாவட்டம், நங்கவல்லி அருகே ஒருவர், சுதாகர் என்பவரிடம் இருபதாயிரம் ரூபாய்க் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை குறிப்பிட்ட நேரத்தில் அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர் வீட்டில் வளர்த்திருந்த ஆட்டை கடன் கொடுத்தவர் பறிமுதல் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த கடன் பெற்றவரின் மகனான நிர்மல் ராஜ் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நிர்மல் ராஜ் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். நிர்மல் ராஜ் இறந்த செய்தி, அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து சுதாகர் உள்ளிட்ட இரண்டு பேர் மீது கடன் கேட்டு மிரட்டியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in