தாயை பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரம்... தந்தையை 15 முறை கத்தியால் குத்திக்கொன்ற மகன்!

தந்தையைக் கொன்ற மகன் கைது
தந்தையைக் கொன்ற மகன் கைதுதாயை பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரம்... தந்தையை 15 முறை கத்தியால் குத்திக்கொன்ற மகன்!

தனது தாயை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை 15 முறை கத்தியால் குத்தி அவரது மகனே கொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், முங்கர் மாவட்டத்தில் கிழக்கு காலனியைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளி அனில்குமார் மண்டல்(58). இவருக்கு ரீட்டா தேவி என்ற மனைவியும், அர்னாப் மேத்தா என்ற மகனும் உள்ளனர்.

நேற்று நள்ளிரவு குடிபோதையில் தனது மனைவியை அனில்குமார் மண்டல், பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் ரீட்டா தேவி அலறியதுடன், அனில்குமாரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்னாப், தனது தந்தையை கத்தியால் கழுத்து, மார்பு மற்றும் உடலில் 15 முறை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அனில்குமார் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அனில்குமார் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து அனில்குமாரின் மனைவி ரீட்டாதேவி, அவரது மகன் அர்னாப் மேத்தா ஆகியோரை இன்று கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து அர்னாப் கூறுகையில், “எனது தந்தை குடிபோதையில் எனது தாயை அடிக்கடி துஷ்பிரயோகம் செய்து வந்தார். நேற்று நள்ளிரவு மது போதையில் மீண்டும் தகராறு செய்து எனது தாயாரை உடல் ரீதியாக துப்புறுத்தினார். தடுக்க முயன்ற என்னையும் தாக்கினார். நான் அவரை தற்காப்புக்காக கத்தியால் குத்தினேன்" என்றார்.

தன் கண் முன்னால் தாயை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை மகனே குத்திக்கொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in