வாசலில் படுத்துறங்கிய தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்: சொத்துப் பிரச்சினையால் ஆத்திரம்

வாசலில் படுத்துறங்கிய தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்: சொத்துப் பிரச்சினையால் ஆத்திரம்

மானாமதுரை அருகே சொத்து பிரச்சினையால் மகனே தந்தையை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி(60). இவர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இவருக்கும், இவரது மூத்த மகனான அய்யங்காளைக்கும் சொத்துப்பிரச்சினையால் குறித்து அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில், இன்று அதிகாலை வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த பழனியாண்டியை அவரது மகன் அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தொடர்ந்து, அய்யங்காளை தப்பி ஓடினார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் பழனியாண்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய அய்யங்காளையைத் தேடி வருகின்றனர். சொத்துத்தகராறில் தந்தையை மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in