மகனை கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயர்.. உருக்கமான கடிதம் சிக்கியது!

மகனை கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயர்.. உருக்கமான கடிதம் சிக்கியது!

மகனை கொன்று விட்டு மனைவியுடன் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தக்கலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் என்ஜினீயர் எழுதிய உருக்கமான கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள முகிலன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முரளீதரன் (40). என்ஜினீயரான இவர், தக்கலை அருகே உள்ள சரல்விளை, சக்திநகரில் மனைவி ஷைலஜா(35), மகன் ஜீவா (7) ஆகியோருடன் வசித்து வந்தார். மகன் ஜீவா மனவளர்ச்சி குன்றி காணப்பட்டதால் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் மகனுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் முரளீதரன் வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மகனை கொன்று விட்டு முரளீதரன், தனது மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தக்கலை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது, முரளீதரன் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். மகன் ஜீவாவின் உடல் நிலை சரியாக மருத்துவமனைக்கு தொடர்ந்து சிகிச்சைக்காக அழைத்து சென்று வந்துள்ளார் முரளீதரன்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பும் மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, ஜீவாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உங்கள் மகன் அதிக நாட்கள் உயிர்வாழ போவதில்லை என கூறியுள்ளனர். இதனால், மனமுடைந்த முரளீதரனும், அவரது மனைவியும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். தாங்கள் இறந்த பின்பு மகன் அநாதை ஆகிவிடுவான் என நினைத்து அவனையும் கொலைச் செய்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பின்பு, முரளீதரனின் சொந்த ஊரான முகிலன்குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in