`உயிரிழந்த அம்மாவே என் மகளாக பிறப்பார்'- நம்பிய மகன் தாயின் நினைவு நாளில் உயிரை மாய்த்த சோகம்

`உயிரிழந்த அம்மாவே என் மகளாக பிறப்பார்'- நம்பிய மகன் தாயின் நினைவு நாளில் உயிரை மாய்த்த சோகம்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் தாயின் நினைவுநாளுக்காக காத்திருந்து மகன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திசையன்விளை இசக்கி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தூர் பாண்டி(42). இவரது மனைவி பானுமதி. இந்தத் தம்பதிருக்கு கல்யாணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தம்பதிக்கு குழந்தை இல்லை. கடந்த ஆண்டு செந்தூர் பாண்டியின் தாய் ராஜபூபதி உடல்நலமின்மையால் உயிர் இழந்தார். அப்போது உயிர் இழந்த அம்மாவே, தன் மகளாக வந்து பிறப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தார் செந்தூர் பாண்டி. ஆனால் அந்த நம்பிக்கையும் தகர்ந்து போனது.

இந்நிலையில் நேற்று செந்தூர் பாண்டியின் தாய் ராஜபூபதியின் முதலாமாண்டு நினைவஞ்சலி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்குச் சென்ற செந்தூர் பாண்டி குழந்தை இல்லாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக திசையன்விளை ஆய்வாளர் ஜமால் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in