அருவியில் குளித்தபோது மூச்சுத் திணறல்; தாய் கண்முன்பே உயிாிழந்த மகன்: உறவினர் அஸ்தியை கரைக்கச் சென்றபோது சோகம்

அருண்
அருண்

திண்டுக்கலில் இறந்துபோன உறவினரின் அஸ்தியை ஈமச்சடங்குக்குப் பின்பு கரைத்துவிட்டு அருவில் குளிக்கச் சென்ற வாலிபர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் மகன் அருண்(28) பட்டதாரியான இவர், மாட்டுத்தாவணி பகுதியில் காய்கறிக்கடை நடத்திவந்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் இவருக்கு வீரம்மாள் என்னும் உறவினர் உள்ளார். வீரம்மாள் வயோதிகத்தின் காரணமாக கடந்த இரு நாள்களுக்கு முன்பு இறந்தார். இந்த துக்க நிகழ்விற்காக அருண் தன் அம்மாவுடன் வந்து கலந்துகொண்டார். இறந்துபோன வீரம்மாளுக்கு மதச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டு, அவரது அஸ்தியை ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியில் இன்று காலையில் கரைக்கச் சென்றனர்.

அதில் அருணும் சென்று அஸ்தியைக் கரைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார். அருண் அருவியில் குளிக்கச் சென்றார். அப்போது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் அவரோடு அஸ்தியைக் கரைக்க வந்திருந்த அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் கண்முன்பே அருண் நீரில் மூழ்கிப் பலியானார். ஒட்டன்சத்திரம் தீயணைப்புப் போலீஸார் இரண்டுமணிநேர தேடுதல் வேட்டைக்குப் பின்பே அருணின் உடலைக் கண்டுபிடித்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in