காதல் தோல்வியால் விஷம் குடித்து மகன் தற்கொலை…கொள்ளி வைத்து விட்டு வீட்டிற்கு வந்த தந்தை மாரடைப்பால் மரணம்: மதுரையில் நடந்த சோகம்

காதல் தோல்வியால் விஷம் குடித்து மகன் தற்கொலை…கொள்ளி வைத்து விட்டு வீட்டிற்கு வந்த தந்தை மாரடைப்பால் மரணம்: மதுரையில் நடந்த சோகம்

காதல் தோல்வியில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், மகனின் உடலுக்கு கொள்ளி வைத்த தந்தையும் துக்கம் தாளாமல் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த தம்பதியர் கணேசன்,சுப்புலட்சுமி. இவர்களது ஒரே மகன் சிவானந்த மணி(21), மதுரை திருப்பாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவானந்தமணி விஷம் குடித்தார். இதைக் கண்ட கண்ட குடும்பத்தினர் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை சிவானந்தமணி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கீரைத்துறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிவானந்த மணி, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்பெண் அவரது காதலை ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால், காதல் தோல்வியால் விரக்தியடைந்த சிவானந்தமணி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், உடற்கூறாய்விற்கு பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இறுதிச்சடங்குகள் நடந்தன. இறுதியாக, இடுகாட்டில் தனது மகனின் உடலுக்கு தந்தை கணேசனே கொள்ளி வைத்தார். தொடர்ந்து, வீட்டிற்கு வந்த கணேசனால், சிறு வயதிலேயே தனது மகன் உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் அதீத வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு வீட்டிலேயே அவரும் உயிரிழந்தார்.

காதல் தோல்வியால் மகன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகன் இழப்பை தாங்க முடியாத பாசத் தந்தையும் மாரடைப்பால் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த கீரைத்துறை காவல்துறையினர் சம்பவத்திற்கு வந்து கணேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in