பயமுறுத்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட மகன்: தாய் கண்முன்னே நடந்த பயங்கரம்

பயமுறுத்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட மகன்: தாய் கண்முன்னே நடந்த பயங்கரம்
136192383003102

தனது தாயை பயமுறுத்துவதாக நினைத்து உண்மையான பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரிழந்தார் மனநிலை பாதிக்கப்பட்ட மகன்.

மதுரை மாவட்டம், பரவையைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் அழகர்சாமியின் மகன் சரவண விஷால் (23). கல்லூரி படிப்பை முடித்து விட்டு தனது தாயுடன் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று தனது தாயை பயமுறுத்த நினைத்த சரவண விஷால் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்வதாகக்கூறி அவரது தாயுடன் வாக்குவாதம் செய்ததாகவும், இதையடுத்து, குளியலறைக்குள் சென்று பிளேடால் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதில், குளியலறையினுள்ளேயே மயங்கி விழுந்த சரவண விஷால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட அவரது தாய் அலறித்துடித்துள்ளார். உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சமயநல்லூர் காவல்துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த சரவண விஷால் கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. மேலும், வீடு திரும்பிய சில நாட்களிலேயே தனது தாயை பயமுறுத்துவதாக நினைத்து உண்மையாகவே பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in