கள்ளத்தொடர்பைக் கண்டித்தார் தாய்: விஷம் குடித்து தற்கொலை செய்தார் மகன்

கள்ளத்தொடர்பைக்
கண்டித்தார் தாய்: விஷம் குடித்து தற்கொலை செய்தார் மகன்

கள்ளத்தொடர்பை தாய் கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடைக்கானலில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார்(38). இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் மதன்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார்.

இச்சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த மீனா என்பவருடன் மதன்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. மீனாவுக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர்களுக்கு இடையேயான உறவு குறித்து மதன்குமாரின் தாய் லட்சுமிக்கு தெரிய வந்தது. இதனால் அவர் மதன்குமாரைக் கண்டித்துள்ளார். மேலும், அவருடன் பழகி வந்த மீனாவும் வெளியூருக்கு சென்றுவிட்டார்.

இதனால், மனமுடைந்த மதன்குமார் விஷம் அருந்தி வீட்டில் மயங்கிக் கிடந்தார். இதனைக்கண்ட வீட்டில் இருந்தவர்கள் மதன்குமாரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, வழக்குப் பதிந்த கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in