`அம்மாவை மிரட்டினார்; அதனால் சித்தப்பாவை கொன்றேன்'- வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம்

கொலை
கொலை

ஏழுவருடமாகத் துரத்திய பகைக்கு சித்தப்பாவை துள்ளத் துடிக்க கல்லால் அடித்தே வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கொத்தன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா தாஸ். இவருக்கு காஸ்டின், சுரேஷ்(45) என மகன்கள் உள்ளனர். சொத்துத் தகராறு தொடர்பாக இவர்கள் இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லை. இந்நிலையில் நேற்று மாலை சுரேஷ் கொத்தன்குளம் நூலகம் அருகே நின்றுகொண்டிருந்தபோது அங்குவந்த காஸ்டினின் மகன் அருண் ஜெனிசு, தன் சித்தப்பாவுடன் தகராறில் ஈடுபட்டார். அதில் அவரது வயிற்றில் குத்தினார். தொடர்ந்து கீழே கிடந்த கல்லால் சுரேஷை தலையில் தாக்கினார். இதில் சுரேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சுசீந்திரம் போலீஸார் சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை வழக்கில் கைதான அருண் ஜெனிசு கொடுத்த வாக்குமூலத்தில், “என் சித்தப்பாவுக்கும், எங்களுக்கும் குடும்பப்பகை இருந்தது. சித்தப்பாவின் முதல் மனைவி பிரிந்துசென்றுவிட்டார். அவர் இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடிவந்தார். அப்பாவும், அம்மாவும் அவருக்கு வரும் திருமண வரன்களை தடுப்பதாகத் தகராறு செய்துவந்தார். இதேபோல் சித்தப்பா சுரேஷ், ஏழு வருடங்களுக்கு முன்பே என் அப்பா காஸ்டினையும், அம்மா சரஸ்வதியையும் கொல்ல முயன்றார். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. ஆனால் இந்த வழக்கை வாபஸ் பெறச் சொல்லியும் மிரட்டிவந்தார். அதனால்தான் கொன்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in