விரதம் இருந்துவிட்டு தினமும் குடித்துவிட்டு வந்த மகன்: கண்டித்த தாய் பீர் பாட்டிலால் கொடூரக்கொலை

கைதுச் செய்யப்பட்ட அஜய்
கைதுச் செய்யப்பட்ட அஜய்விரதம் இருந்துவிட்டு தினமும் குடித்துவிட்டு வந்த மகன்: கண்டித்த தாய் பீர் பாட்டிலால் கொடூரக்கொலை

சென்னை வியாசர்பாடியில், மகா சிவராத்திரிக்காக மாலை அணிந்துக் கொண்டு குடித்துவிட்டு வந்த மகனை கண்டித்தத் தாயை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கண்ணகி. இவரது மகன் அஜய். 22 வயதான அஜய் அதேப்பகுதியில் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். மகா சிவராத்திரிக்காக அஜய் மாலை அணிந்து விரதம் இருந்து வந்துள்ளார். மாலை அணிந்துள்ள நிலையில், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

மாலை அணிந்து தினமும் குடித்துவிட்டு வருவது குறித்து தாய் கண்ணகி மகனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் பீர் பாட்டிலால் தாயை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் நிலைக்குலைந்து விழுந்த கண்ணகியை அக்கம்பக்கத்தினர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கண்ணகி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி போலீஸார் அஜயை கைது செய்துள்ளனர். மதுப்போதையில் தாயை மகனே பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in