ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்; வீட்டிற்கு வந்த இளைய மகன் அதிர்ச்சி: கொலை செய்த மூத்த மகன் கைது

கொலை செய்யப்பட்ட சீதாதேவி
கொலை செய்யப்பட்ட சீதாதேவி ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்; வீட்டிற்கு வந்த இளைய மகன் அதிர்ச்சி: கொலை செய்த இளைய மகன் கைது

பெரும்பாக்கத்தில் இரும்பு கம்பியால் தாயை அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெரும்பாக்கம், பசும்பொன் நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வரும் இவருக்கு சீதாதேவி(50) என்ற மனைவியும், சதீஷ்குமார்(28), வைத்தியநாதன் என இரு மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் இளையமகன் வைத்தியநாதன் நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன் அறையில் தாய் சீதாதேவி தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்ததில் சீதா இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சீதாதேவி உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முதல் மகன் சதீஷ்குமார் தாயை இரும்புராடால் தலை, முகத்தில் அடித்துக்கொலை செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில் சதீஷ்குமார் மாம்பாக்கம் மெயின் ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீஸார் அங்கு சென்று அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சதீஷ்குமார் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்ததை அடுத்து போலீஸார் அவர்களது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in