`அக்கா இருக்கும்போது ஏன் திருமணம் செய்து கொண்டாய்?'- கண்டித்த தந்தையை கொடூரமாகக் கொன்ற மகன்

மகன் அருண்
மகன் அருண் `அக்கா இருக்கும்போது ஏன் திருமணம் செய்து கொண்டாய்?'- கண்டித்த தந்தையை கொடூரமாகக் கொன்ற மகன்

திருமானூர் அருகே குடிபோதையில் தந்தையை குத்திக் கொன்ற மகனை போலீஸார்  கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் போலீஸ் சரகம், கருப்பிலாக்கட்டளை கிராமம், காலனி தெருவைச் சேர்ந்த தனராஜ் என்பவரது மகன் அர்ச்சுனன் (50). இவருக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், அர்ச்சுனன் மனைவி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அர்ச்சுனனின் இரண்டாவது மகன் அருண்(22) என்பவர், திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.

இதனிடையே திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் கிராமத்தை மகாலட்சுமி என்பவரை வீட்டுக்கு தெரியாமல்  திருமணம் கொண்டு விட்டாராம்.  இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சுனன், அருணிடம், உனக்கு மூத்த அண்ணன் மற்றும் மூத்த அக்கா இருக்கும்போது நீ எப்படி திருமணம்  செய்து கொண்டாய் என  தகராறு செய்திருக்கிறார். 

இந்த நிலையில், நேற்று இரவு, அருண் மரம் வெட்டும் வேலைக்கு சென்றுவிட்டு, குடிபோதையில் வந்துள்ளார். அவரது தந்தை அர்ச்சுனனும் குடிபோதையில் இருந்துள்ளார்.  வழக்கம் போல் தந்தை, மகன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிப்போய், அருண் கத்தியை எடுத்து தனது தந்தை அர்ச்சுனனை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். 

படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக இறந்து போனார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு, அர்ச்சுனன் உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். 

தந்தையை கொலை செய்த  அருணை கைது செய்துள்ளனர். குடிபோதையில் தந்தையை மகன் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in