அம்மாவை கொடுமைப்படுத்திய தந்தை: கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன் கைது

கொலை
கொலைஅம்மாவை கொடுமைப்படுத்திய தந்தை: கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன் கைது

தந்தையைக் கொலை செய்துவிட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக நாடகமாடிய மகனை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(52), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா(45). இவர்களது மகன் மணிகண்டன்(27). இவருக்குத் திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஆறுமுகம் வேலை செய்து வருகிறார்.

ஆறுமுகம் தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கிருஷ்ணபேரி கிராம நிர்வாக அலுவலர் உமாராணிக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவர் அங்கு சென்றார். அப்போது அவரிடம் ஆறுமுகத்தின் மனைவி சித்ரா, தன் கணவர் மதுபோதையில் மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால் வி.ஏ.ஓ பார்த்தபோது ஆறுமுகத்தின் உடலில் ஆங்காங்கே ரத்தக் காயங்கள் இருந்தன. ஆனால் உமாராணி சந்தேகம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் குடிபோதையில் மனைவி சித்ராவைத் தாக்கி உள்ளார். தன் தாயைத் தாக்குவதைப் பார்த்து கோபம் அடைந்த மணிகண்டன், தன் தந்தையை அடித்துள்ளார். இதில் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தந்தையைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனை போலீஸார் இன்று கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in