1906-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இவ்வளவு மழையா?

1906-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இவ்வளவு மழையா?

தமிழகத்தில் 113 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக அளவு மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதிலும் தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது . நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதாக வானிலை எச்சரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, தென்மேற்கு பருவமழை 40 சென்டிமீட்டர் வரை பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 88 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இது வரை அதிகளவில் 1906-ம் ஆண்டில் 112 சென்டிமீட்டர் மழையும், 1909-ம் ஆண்டு 127 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில் 93 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவே கடந்த 113 ஆண்டுகளில் பதிவாகியுள்ள அதிகளவிலான மழை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் 292 சதவீத மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in